இப்பின்னூட்டம் கீழேயுள்ள சுட்டியில் இருக்கிறது.
http://www.vinavu.com/2015/02/02/north-indian-workers-as-modern-bonded-labour-in-ranipet/#comment-394772
///
வாசகர்களுக்கு,விவாதம் விவசாயத்தின் பக்கம் நகர்ந்திருக்கிறது. பரவாயில்லை.
எனது கருத்துக்கள் சில:
1. சாண மற்றும் தளை எருவுக்கு மாற்று இல்லவே இல்லை. இதை வண்டிவண்டியாக நாம் செலாவனி கொடுத்து வாங்கவில்லை. இது நமது கொல்லையிலேயே சேகரமானது. நெல்லுக்கு இன்றும் தளையையும் போடுகிறார்கள். சாணத்துடன் வைக்கோல் சோளத் தட்டை கழிவுகளை போட்டு எருவாக்கியது தான் எல்லாவகையிலும் சிறந்த உரம்.
2. பாசன வசதிகள் வளர்ச்சிக்கு தகுந்தவாறு கால்நடையும் அதன் எருவும் பெருகியிருக்கும். எனவே இதைவைத்தே நாம் நன்றாக விவசாயம் செய்திருக்க முடியும்.
3. முன்னர் எருவாக ஏரி மேல்மண்ணும் பயன்படுத்தப்பட்டது. ஏரிகளில் வேல மரங்களை நட்டும், அதைக் காப்பதாக சொல்லியும் மண் எடுப்பதை தடுத்தனர். இது உரக்கம்பெனிகள் பிழைக்கவேண்டி செய்யப்பட்டது என்பதில் உன்மையில்லாமல் இல்லை.
4. இலை தளைகளுடன் சிறிதளவு சாணத்தை சேரத்து எரு உருவாக்குவது ஒரளவுக்கு புதிய முறைதான். இதை பெரிய அளவில் விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி பயன்படுத்தி வேதியல் உரங்களைப் பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். வேளான் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்கள் அரசு அதிகாரிகள் இதை செய்யத் தவறிவிட்டார்கள். உரங்களின் பூச்சிக்கொல்லிகளின் விற்பனையால் நிறைய மக்களுக்கு நிறைய ஊக்கத்தொகை கிடைத்ததால் காசில்லா வழிமுறைகள் பரவலாக்கப்படவில்லை. பல வேளாண் அறிஞர்கள் அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களுக்கு ஆராய்ச்சி நிலையங்களுக்கு scholarship கொடுத்து வரவழைக்கப்பட்டனர். இவர்கள் இயற்கையைப்பற்றி அக்கறைப்பட்டால் அவர்கள் கவனிப்பு இல்லாமல் போயிருக்கலாம்.
5. மனிதனின் தனியுடமை பேராசை தான் இதற்கெல்லாம் காரணம். விஞ்ஞானிகள், விவசாய ‘வல்லுனர்கள்’ தொடங்கி விவசாயி வரை இதில் பங்கு இருக்கிறது. பூச்சிகளைக் கொல்லக்கூடிய கொடிய விசங்களால் நமக்கு ஏதும் நடந்து விடாது என்று எண்ணுவது எவ்வளவு அசட்டுத்தனம்.
6. அமேரிக்காவின் அளவுக்கு விச ரசாயணங்கள் ரஸ்யாவில் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் யார் செய்தாலும் தவறுதான். அதே சமயம் போட்டி போடவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு எடுத்துச் சென்றவர்களுக்கு இந்த குற்றத்தில் அதிக பங்கு இருக்கிறது.
7. அப்போது பின்விளைவுகளைப் பற்றி யோசிக்கவில்லை என்றாலும் ஆரம்ப கட்டம் என்பதால் அது பெரிய தவறில்லை. ஆனால் இன்னும் அதே பாதையில் தான் சென்று கொணடிருக்கிறோம். இன்றே நமது திசையைத் திருப்பிக் கொள்வதே முன்னெச்சரிக்கையானது. சிலர் யூகிப்பதைப் போன்று, தாமிரத்தை மறுசுழற்சி செய்து விடலாம். மின்சாரத்தை வைத்து அதை சாதாரண மண்ணிலிருந்து கூட பிரித்தெடுத்துவிடலாம். ஆனால் இவ்வாறு எத்தனை பொருள்களை மீட்க முடியும். பாழாகிய மண்ணை நிலத்தடி நீரை எவ்வளவு விலை கொடுத்து எந்த நுட்பத்தை வைத்து சரிசெய்யமுடியும்? இதற்கு எவ்வளவு செலவு ஆகும். யார் ஏற்பார்கள். நம் எல்லோருக்கும் நீரை, உணவை எப்படி பெறுவது?
///